திருமணத்திற்கு முன் குழந்தை பெற்று கொண்ட எமி ஜாக்சன் காதலரை விட்டு பிரிகிறாரா?

Published : Jul 28, 2021, 03:07 PM IST

பிரபல நடிகை எமி ஜாக்சன் விரைவில் காதலரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காதலரை பிரிய உள்ளதாக, ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.   

PREV
17
திருமணத்திற்கு முன் குழந்தை பெற்று கொண்ட எமி ஜாக்சன் காதலரை விட்டு பிரிகிறாரா?

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார்.
 

27

இதையடுத்து விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.ஓ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

 

37

திரையுலகில் பிசியாக நடித்து கொண்டிருக்கு போதே..  ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரது குழந்தைக்கு தாயாக உள்ளத்தையும் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
 

47

குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன், கடந்த ஆண்டே திருமண வாழ்க்கையில் இணைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தான் உள்ளார்.
 

57

இந்நிலையில் எமி தன்னுடைய காதலை விட்டு பிரியும் முடிவை எடுத்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 

67

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், எமி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து, காதலருடன் இருக்கும் சில புகைப்படங்களை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் காதலருடன் எமி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்து இன்னும் உள்ளது. 
 

77
Amy Jackson

புகைப்படங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுவது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. மேலும் இது குறித்து எமி ஜாக்சன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது உண்மையா... அல்லது வதந்தியா? என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!

Recommended Stories