அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ், தனுஷ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனது முதல் படமான “பரியேறு பெருமாள்” படத்திலேயே தமிழ் சினிமாவை உற்று நோக்க வைத்த மாரி செல்வராஜ் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
சூப்பர் ஸ்டாருடனும், உலக நாயகனுடனும் ஒரு படத்திலாவது நடித்துவிட என்ற அப்போது நடிகைகள் பேட்டிகளில் கூறிவந்தனர். சிறிது காலத்திற்கு முன்பு வரை விஜய், அஜித் எனக்கூறிக்கொண்டிருந்தனர், தற்போது அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் நடிப்பு அசுரன் தனுஷ்.