'புஷ்பா 2' பட குழுவினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள சம்பவம், கோலிவுட் திரை உலக்கினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். செம்மர கடத்தல் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
83 வயதில்.. 29 வயது காதலி மூலம் நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ள பிரபல நடிகர்!
மைத்ரேயி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம், வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது பட குழுவினர் இரண்டாம் பாகத்தின் படபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு 'புஷ்பா 2' படத்தில் இருந்து, கிலிப்ஸி வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது. அதை போல் சிறப்பு போஸ்டர் ஒன்றும் வெளியாகிய, நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்.. பட குழுவினர் படப்பிடிப்புக்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலில், 'புஷ்பா 2' பட குழுவினர் தெலுங்கானா மாநிலம், நல்ல கொண்டாமாவட்டம் நர்கெட்பள்ளி என்ற இடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, துரதிஷ்டவசமாக எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 'புஷ்பா 2' பட குழுவினர் சிலர், பலத்த காயமடைந்த நிலையில் ஒரு சிலர் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவா இது? யங் லுக்கில் வேற லெவல் போட்டோ ஷூட்!
மேலும் விபத்தில் காயம் அடைந்த படக்குழுவினர் அனைவரும், உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் டோலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.