செக்ஸுக்காக மாத்திரை... பெட்ரூமில் சிசிடிவி - விஷ்ணுகாந்தின் லீலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன சம்யுக்தா

First Published | May 31, 2023, 4:02 PM IST

சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சம்யுக்தா, தற்போது அவரை பிரிந்த பின்னர் அவரைப்பற்றி பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.

சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சம்யுக்தா, திருமணமான இரண்டே மாதத்தில் அவருடன் ஏற்பட்ட மோதலால், அவரைவிட்டு பிரிந்தார். விஷ்ணுகாந்தை பிரிந்த பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை இன்ஸ்டாகிராம் நேரலையில் சொன்ன சம்யுக்தா, தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு தன் தாய், தந்தையுடன் வந்து அளித்துள்ள பேட்டியில், விஷ்ணு காந்த் தனக்கு அளித்த செக்ஸ் டார்ச்சர் குறித்து பேசி கண்கலங்கி உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : விஷ்ணுகாந்த் எப்பவுமே என்னையும், என் பெற்றோரையும் மரியாதையா நடத்தியதே இல்லை. அவருக்கு செக்ஸை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை. ஒரு மனைவியை எப்படி நடத்தனும் அப்படிங்குறதே அவருக்கு தெரியல. 24 மணிநேரமும் அந்த மூடுலயே தான் இருப்பாரு. என்னோட மனநிலையை அவர் யோசிக்கவே இல்லை. நான் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், என்னை வேறுவிதமாக நடத்துவார்.

Tap to resize

நான் முக்கியமா அவரை பிரிந்து வந்ததற்கு காரணம், அவருக்கு என்மேல் சுத்தமாக பாசம் இல்லை. நான் ஒரு மிஷினா தான் அவருக்கு தெரிஞ்சிருக்கேன். ஒரு பொம்மை மாதிரி தான் என்ன பாத்திருக்காரு. ஒரு செக்ஸ் வீடியோ பார்த்து இந்த மாதிரி பண்ணனும்னு சொல்லுவாரு. இதற்கு அடுத்தபடியாக, நம்ம செக்ஸ் பண்றதையே பாக்கலாம்னு பெட்ரூம்ல கேமரா வைக்கலாம்னுலாம் சொன்னாரு.

இதையும் படியுங்கள்... நரக வாழ்க்கை... சம்யுக்தா உடனான திருமண முறிவு குறித்து நடிகர் விஷ்ணுகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

நான் இவ்ளோ நாள் இதை மீடியாவிடம் சொல்லாததற்கு காரணம், அது சொன்னால் எனக்கும் அது அசிங்கம். செய்யாத ஒரு தப்புக்காக நான் இவ்ளோ கெட்ட பெயர் வாங்கிட்டேன். நான் விஷ்ணுகாந்தை ஏன் பிரிந்து வந்தேன் அப்படிங்குறதே மறைஞ்சிருச்சு, இப்போ என்னுடைய கடந்த கால வாழ்க்கை தான் பெரிய விஷயமா இருக்கு. அவர் என்னை ஒரு விபச்சாரியை விட கேவலமா நடத்துனாரு. செக்ஸ் பண்ணும்போது வலிதாங்க முடியாம கத்தினாலும், என்னை வாயை மூடச் சொல்லி அடிப்பார் எனக்கூறி கண்கலங்கினார் சம்யுக்தா.

இதையடுத்து பேசிய சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரை போட்டுக்கொண்டு தன் மகளை டார்ச்சர் பண்ணியுள்ளார். ஒரு மனைவிக்கிட்ட எவனாச்சும் ஆபாச படத்தை காட்டி இந்த மாதிரி பண்ணலாம், அந்த மாதிரி பண்ணலாம்னு சொல்லுவானா. ஒரு விபச்சாரிய கூட அவ உரிமை இல்லாம தொடக்கூடாது அப்படிங்கிறது தான் சட்டம். அவர் இவ்ளோ டார்ச்சர் கொடுத்ததால் தான் ஒரு மாதத்தில் பிரிந்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... 15 வருஷமா அதே அழகுடன் இருப்பதன் ரகசியம் என்ன? - ரெஜினா பட விழாவில் நடிகை சுனேனா சொன்ன சீக்ரெட்

Latest Videos

click me!