ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இயக்குனர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞர்ராக வலம் வந்து கொண்டிருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
எனவே இவரை பலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வந்தனர். அருவி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, போன்ற படங்களில் நேரடியாகவே சில இயக்குனர்களும் இவரை விமர்சிக்கும் விதமாக காட்சிகளை வைத்திருந்தனர். எனினும் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக குஷ்பு போன்ற பிரபலங்களும் மற்ற சில தொலைக்காட்சியில் இதே போன்ற பஞ்சாயத்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாயத்து நிகழ்ச்சியை தாண்டி இவர் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டி வந்த ஒரே விஷயம் திரைப்பட இயக்கத்தில் தான். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும், ஏதேனும் ஒரு கருத்தை ஆழமாக வலியுறுத்தும் படங்களாகவே அமைந்தது. கடந்த 2016 ஆண்டு வெளியான 'அம்மணி' திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'ஹவுஸ் ஓனர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. கடைசி மகளான ஷ்ரேயா மட்டுக்கே இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் உள்ளதாகவும், 20 மருத்துவர்கள் சேர்ந்து சிகிச்சை அளித்தபின்னர் தற்போது சற்று உடல்நலம் தேறி இருப்பதாகவும், எனினும் முழுமையாக அவர் குணமடையவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இவருக்கு என்ன பிரச்சனை என்பதை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவிக்கவில்லை.
எனவே இந்த வருட ஓணம் பண்டிகையை மிக சிறிய அளவிலேயே தங்களுடைய வீட்டில் கொண்டாடியதாக இது குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரேயா மிகவும் உடல் இளைத்து காணப்படுகிறார். மகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றாலும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், இருக்கும் இவருக்கு ரசிகர்களும் தொடர்ந்து, தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன், கணவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.