திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ..! என்ன ஆனது? அவரே கூறிய தகவல்!

First Published | Oct 5, 2022, 5:42 PM IST

நடிகை குஷ்பூ திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை வெளியிட்டு, என்ன ஆனது என்பது குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.
 

திருமணம் ஆன பின்னர், திரையுலகை விட்டு காணாமல் போன 90-களில் நடித்த நடிகைகள் மத்தியில், தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது வரை தரமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. நடிப்பை தாண்டி, சீரியல், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

இவர் தயாரிப்பில்... இவரது கணவரும், இயக்குனருமான சுந்தர் .சி இயக்கியுள்ள 'காபி வித் காதல்' என்கிற படத்தை குஷ்பூ  தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், இந்த வாரம் ரிலீசாக இருந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வருகையால் தள்ளி போனது. மேலும், கணவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட குஷ்பூ திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு டும்.. டும்... டும்..! பிரபலங்கள் நேரில் வாழ்த்து..!
 

Tap to resize

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படத்தை பகிர்ந்து, தனக்கு coccyx bone (முதுகு தண்டுவள பகுதிக்கு கீழ்) மிகவும் வலி ஏற்பட்டதாகவும், இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள குஷ்பூ, 2 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வேன் என தெரிவித்து, விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் இந்த புகைப்படத்தை பார்த்து பதறி போன ரசிகர்கள்... விரைவில் நலம் பெற்று, வர தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: விரைவில் திருமணம்... காதலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஹரீஷ் கல்யாண்! வைரலாகும் புகைப்படம்!
 

Latest Videos

click me!