நடிகை அமலாபால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இந்த படத்தை தொடர்ந்து, 'அரிது அரிது', 'பொறியாளன்', 'வில் அம்பு' போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்த போதிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாத ஹீரோவாகவே இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை வந்து விட்டு வெளியே வந்ததும், பிக்பாஸ் ரைசாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'பியர் பிரேமா காதல்' திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா கேரியரில் நிலையான இடத்தை பிடித்து விட்டதால்... ஹரீஷ் கல்யாணுக்கு இவரது பெற்றோர் திருமணத்திற்கு தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இவரது திருமணம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில்... முதல் முறையாக தன்னுடைய காதலியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.