கடந்த சில வருடங்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும், நாயகன் - நாயகி நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளவது அதிகரித்து வருகிறது.
இவர்களை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்துவும், கதாநாயகியாக நடித்த ஷ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது... வெளியிடங்களுக்கு செல்லும் போது, தங்களின் ஷாப்பிங் வீடியோ, டூர் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஜோடி தற்போது, மாலத்தீவுக்கு சென்றுள்ளது. அங்கு இருவரும் ரொமான்ஸில் மல்லுக்கட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட அந்த போட்டோஸ்... வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்திகள்: அச்சு அசல் குந்தவையாகவே மாறிய சனம் ஷெட்டி..! த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.