பொம்ம படத்துக்கு இத்தனை கோடியா..! ஆதிபுருஷ் படத்தில் நடிக்க பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 5, 2022, 1:05 PM IST

ராமாயணக் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து பிரபாஸின் மார்க்கெட்டும் அசுர வளர்ச்சி கண்டது. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தையும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கியதோடு பான் இந்தியா படமாகவும் வெளியிட்டனர்.

அந்த வகையில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தன. குறிப்பாக அவர் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... இன்று சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சூர்யா.. நடிக்க வரும்முன் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tap to resize

இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். ராமாயணக் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.

இதனிடையே சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பொம்மை படம் போல் உள்ளதாகவும், வி.எஃப்.எக்ஸ் மிகவும் மோசமாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் சாடினர். இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபாஸ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் ராமராக நடிக்க ரூ.100 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம் பிரபாஸ். 

இதையும் படியுங்கள்... தமிழகத்தில் பிறந்து வளர்ந்து.. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் லிஸ்ட் இதோ

Latest Videos

click me!