தமிழ் சினிமாவின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் 60 ஆண்டு உழைப்புக்கு பின்னர் சாத்தியமாகி உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளார்.