பகல் நிலவு சீரியலில் பப்ளி பேபியாக அறிமுகமானவர் சிவானி. ஸ்கூல் படிக்கும்போதே அந்த தொடரில் சைடு ரோலில் நடிக்க ஒப்பந்தமான சிவானி, பின்னர் சிக்கென உடல் எடையை குறைத்து அதிலேயே ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதற்கு பின் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்த சிவானி, தன்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டார்.