சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள ஷிவானி நாராயணன், தன்னுடைய 15 வயதிலேயே பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து, அசத்தியவர். இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கர், ரெட்டை ரோஜா, என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்த இவருக்கு 18 வயதை தாண்டியதும் திரையுலகில் அறிமுகமாகும் ஆசை பற்றிக்கொண்டது.
பிக்பாஸ் ப்ரவேசத்துக்கு பின்னர், பல சின்னத்திரை வாய்ப்பு படை எடுத்து வந்து வாசல் கதவை தட்டிய போதிலும், வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்ட ஷிவானி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாது மனைவியாக இறங்கி நடித்தார். மேலும் வீட்டுல விஷேஷம் போன்ற சில படைகளில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அழகில் ரசிகர்களை மயங்கினார்.