ஷிவானியின் பிறந்தநாளுக்கு கேக் ஊட்டி விட்டு... செல்ஃபியில் தெறிக்கவிட்ட பாலாஜி..! வைரல் போட்டோஸ்..!

First Published | May 6, 2021, 2:26 PM IST

பிக்பாஸ் போட்டியாளர் ஷிவானிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பாலாஜி கலந்து கொண்டு அவருக்கு கேக் ஊட்டி விட்டு அவருடைய அம்மாவுடன், எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 காதல் ஜோடிகள் என்று கிசுகிசுவில் சிக்கியவர்கள் பாலாஜி மற்றும் ஷிவானி தான். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததால் இருவரும் காதலிப்பதாக சில வதந்திகள் வந்து ஓய்ந்தது.
மேலும் பிரீஸ் டாஸ்கின் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் தாய் அவரை கண்ட மேனிக்கு திட்டினார். அதே போல் அனைவரிடமும் அன்பாக பேசிய இவர் பாலாஜியிடம் மட்டும் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை.
Tap to resize

இதற்கும் பல்வேறு கண்டனங்கள் எழுந்த பின்னர், கமலஹாசன் ஷிவானியின் அம்மாவை நிகழ்ச்சியில் பங்குபெற வைத்து, சமாதானம் செய்தார். இதை தொடர்ந்து வெளியேறிய பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானி பாலாஜியிடம் பேசுவதை தவிர்த்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னர், ஷிவானி மற்றும் பாலாஜி ஆகியோர் தொடர்ந்து தங்கள் நட்பை வளர்த்து வருகின்றனர். அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னர், ஷிவானி மற்றும் பாலாஜி ஆகியோர் தொடர்ந்து தங்கள் நட்பை வளர்த்து வருகின்றனர். அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று ஷிவானி தன்னுடைய 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பாலாஜி கலந்து கொண்டு அவருக்கு கேக் ஊட்டிவிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ஷிவானியின் அம்மாவை 20s கிளப்பிற்கு வரவேற்பதாக கூறி அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ஷிவானி மற்றும் பாலா ஆர்மியினர் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!