ஷாருக்கானுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீண்டும் ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி... சோகத்தில் குடும்பத்தினர்!

First Published | Oct 20, 2021, 3:58 PM IST

ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) , போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று, அக்டோபர் 20 ஆம் தேதி இவரது ஜாமீன் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது தன்னுடைய மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வர, ஷாருக்கானின் குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே மும்பையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டே ஆர்யனின் வழக்கை நடத்தி வந்த நிலையில், திடீர் என புதிய வழக்கறிஞர் ஒருவரையும் நியமித்தார் ஷாருகான்.

Tap to resize

ஆர்யன் கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8 ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 11 அன்று, இந்த விவகாரம் என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமித் தேசாய் நீதிமன்றத்தில் ஆரியனின் வழக்கை எதிர்த்துப் போராடி, அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க அடுத்த தேதியை கோரினார்.

இப்போது ஆர்யனின் ஜாமீன் நீதிமன்றத்தில் இன்று அதாவது அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஆர்யன் கான் தரப்பில் இருந்து இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்றைய தினம் (அக்டோபர் 20 ) ஆம் தேதி இவருடைய வழக்கை விசாரணை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அதில், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து, அவர்களின் ஜாமின் மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தது.

எப்படியும் மகனை வெளியே கொண்டு வர துடித்து கொண்டிருக்கும் ஷாருகான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இதுவரை மகனை ஜாமீனில் கூட வெளியே கொண்டு வர முடியாததால் கடும் சோகத்தில் உள்ளனர்.

Latest Videos

click me!