சிம்புவுக்கு நெருக்கடி... முதலமைச்சர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன் டி.ராஜேந்தர் பேட்டியால் பரபரப்பு..!

First Published Oct 20, 2021, 2:25 PM IST

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் (Dewali Release) ஆக இருந்த நிலையில் திடீர் என ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்க்கு காரணம் சிம்புவுக்கு (Simbu) கொடுக்கப்பட்ட நெருக்கடி தான், சிம்புவின் தந்தையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் (T Rajendhar) தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் வெளியீட்டு தேதியை திடீர் என மாற்றப்பட்டதாக படக்குழு அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கையில்... திரை உலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்... நீடித்த பெருங்கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறான் மாநாடு.

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல.. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம், அதை கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம். போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை, அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமும் அல்ல. நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம் தான், ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும், என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நஷ்டம் அடையக் கூடாது, சில காரணங்களுக்காக ஏன் என் படம் அதன் வெற்றியும் பலியாக வேண்டும். ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவுள்ளது, நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும், தீபாவளி  வெளியீட்டில் இருந்து வெளியேறுகிறது மாநாடு என தெரிவித்திருந்தார்.

திடீர் என படக்குழு வெளியிட்ட இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. தற்போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாலும், தீபாளிக்கு 'அண்ணாத்த' ரிலீஸ் செய்வதாலும், இந்த முடிவை படக்குழு எடுத்திருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்புவுக்கு நெருக்கடி கொடுக்கவே 'மாநாடு' திரைப்படம் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு, முதலமைச்சர் வீட்டின் முன் உண்ணா விரதம் எடுக்க உள்ளதாகவும் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!