விஜயின் ஆஸ்தான இயக்குனர் என புகழப்பட்டஅட்லி தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் ஹிந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது பலரும் அறிந்த விஷயமே. இவர்களுடன் நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
அதோடு பிரபல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் கேமியோவில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் படத்தின் புதிய தகவலாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இதில் களம் இறங்கியுள்ளார்.
ஜவான் படத்தின் படப்பிடிக்காக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நேற்று சென்னை வந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகின. ஷாருக்கானின் மனைவிகளாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடக்கும் செட்யூலுக்காக விஜய் சேதுபதி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அதோடு மேலும் நயன்தாரா இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகிறார். நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்க உள்ளதாகவும் ஒரு பேச்சு உண்டு.
படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் சுனில் குரோவர் ஆகியோரும் முக்கிய இடங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் 2023 ஜூன் 2 அன்று திரைக்கு வர உள்ளது. முன்னதாக படத்தின் டீசர் உடன் பர்ஸ்ட் லுகும் வெளியிடப்பட்டது.
உடல் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்டு காணப்பட்டார் ஷாருக்கான். கையில் ஒரு மேப்புடன் காணப்பட்ட அவர் யாரையோ தேடுவது போன்று பரபரப்பாக காணப்பட்டார். அதோடு டீசரில் நாயகன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து எங்கோ செல்வதற்காக காத்திருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.