Lion Movie Update: பிரமாண்டமாக உருவாகும் அட்லீ - ஷாருக் படம்...இத்தனை கோடி பட்ஜெட்டா..? வெளியான புதிய தகவல்..!

Anija Kannan   | Asianet News
Published : Apr 20, 2022, 02:46 PM IST

Lion Movie Update: அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் திரைப்படம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
17
Lion Movie Update: பிரமாண்டமாக உருவாகும் அட்லீ - ஷாருக் படம்...இத்தனை கோடி பட்ஜெட்டா..? வெளியான புதிய தகவல்..!
lion-movie

ராஜாராணி படத்தின் மூலம் அறிமுகமாகி குறைந்த கால கட்டத்திலேயே, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. 

27
lion-movie

இவர் விஜய்யுடன் சேர்ந்து, தெறி எனும் படத்தை இயக்க வாய்ப்பளித்தார்.  இதில் இவர்களது கூட்டணி வெற்றி பெற அடுத்ததாக மெர்சல் படத்தில் இணைந்து பணியாற்றினர் அதுவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

37
lion-movie

இவரது இயக்கத்தில், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிகில் படத்திற்கு பிறகு பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான்  உடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தார் அட்லீ. ஆனால் அந்த படம் கடந்த பல வருடங்களாக தொடங்கப்படாமல் இருந்தது.  

47
lion-movie

லயன் என பெயரிப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷாருகனுக்காக ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஷாருகான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூனில் துவங்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

57
lion-movie

சமீபத்தில் ஷாருக் கான் விஜய்யின் பீஸ்ட் பட  அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங் பணிகளுக்கும் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஷாருக், முகத்தை ஸ்கார்ப் வைத்து மறைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.
 

67
lion-movie

இப்படத்திற்காக அட்லீ பல்வேறு விதமான சண்டை காட்சியில் உருவாக்குவதால் கோடிக்கணக்கில் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் திரைப்படம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

77
lion-movie

முன்னதாக, அட்லீ  இயக்கத்தில் விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த படமும் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories