Kaithi: கார்த்தி நடித்த கைதி படத்தின் இந்தி வெளியீடு எப்போது தெரியுமா? அப்டேட் கொடுத்து மாஸ் காட்டிய படக்குழு!

Anija Kannan   | Asianet News
Published : Apr 20, 2022, 01:47 PM IST

Kaithi: கைதி திரைப்படத்தின், இந்தி ரீமேக்கான 'போலா' திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி, வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
18
Kaithi: கார்த்தி நடித்த கைதி படத்தின் இந்தி வெளியீடு எப்போது தெரியுமா? அப்டேட் கொடுத்து மாஸ் காட்டிய படக்குழு!
kaithi

கைதி, கார்த்தி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரேவேற்பை பெற்றது. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

28
kaithi

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர், விருமாண்டி‌ படங்களில் இருந்தும் இன்னும் சில படங்களை மையமாக கொண்டு நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். 

38
kaithi

விவேகானந்த பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருந்த கைதியை சாம் சி எஸ் இசையில் சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

48
kaithi

ஒரு‌ இரவில் முன்னாள் ‌கைதியான‌ கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளை‌ துணிச்சலாக எப்படி காப்பாற்றினார் என்பதையும், விடுதியில் தங்கி இருக்கும் பெண் குழந்தையை பார்க்க வரும்‌ கைதி கார்த்தி பற்றியும் படம் பேசுகிறது.

58
Kaithi

இப்படம் தெலுங்கு  உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியில் ரீமேக்காகும் இந்த படத்தை தர்மேந்திரா ஷர்மா இயக்குகிறார். 

68
kaithi karthi

இப்படம் தெலுங்கு  உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியில் ரீமேக்காகும் இந்த படத்தை தர்மேந்திரா ஷர்மா இயக்குகிறார். 

78
kaithi karthi

அசீம் பஜாஜ் ஒளிப்பதிவில் உருவாகும், இந்தி ரீமேக் படத்தின் ஆரம்ப ஷூட்டிங் இந்த ஆண்டு ஜனவரியில் துவங்கியது  இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

88
Ajay Devgn

இந்நிலையில், அஜய் தேவ்கன் நடிகரும் கைதி திரைப்படத்தின், இந்தி ரீமேக்கான 'போலா' திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி, வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories