பீஸ்ட்ட நான் 4 முறை பார்ப்பேன்... ஆனா மக்கள் ஒருமுறையாச்சும் பாக்குறமாதிரி படம் எடுங்க- விமர்சித்த பிரபல நடிகை

Published : Apr 20, 2022, 11:51 AM IST

kasthuri : பீஸ்ட் படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் விமர்சித்து வருகின்றனர். அண்மையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பீஸ்ட் திரைப்படத்தை விமர்சித்து இருந்தார்.

PREV
14
பீஸ்ட்ட நான் 4 முறை பார்ப்பேன்... ஆனா மக்கள் ஒருமுறையாச்சும் பாக்குறமாதிரி படம் எடுங்க- விமர்சித்த பிரபல நடிகை

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் விஜய் ரசிகர்களுக்கே ஏமாற்றத்தை தான் கொடுத்தது. ஏனெனில் விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை, சொதப்பலான காட்சி அமைப்பு என படத்திற்கு ஏராளமான நெகடிவ் விமர்சனங்கள் வந்தன.

24

பீஸ்ட் படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் விமர்சித்து வருகின்றனர். அண்மையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததற்கு அப்படத்தின் இயக்குனர் தான் காரணம் என கூறினார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகையும், நடிகையுமான கஸ்தூரி பீஸ்ட் படம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

34

அதில் அவர் பேசியிருப்பதாவது : “கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் மக்களை தியேட்டருக்கு வரவழைத்தது ஹாலிவுட் படமோ, பாலிவுட் படமோ, தமிழ் படமோ இல்ல, அதற்கு காரணம் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்கள் தான். உலக படங்களுக்கு இணையான கன்டென்டை கொடுத்தால் மட்டுமே தமிழ் சினிமா தாக்குப்பிடிக்க முடியும்.

44

தற்போதைய சூழலில் கதாநாயகர்களையோ, தயாரிப்பி நிறுவனத்தின் விளம்பர யுக்திகளையோ நம்பி படம் எடுத்தால் மக்கள் அதை நிராகரிக்கிறார்கள். ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுத்தால் போதாது, பொதுமக்களுக்காகவும் படம் எடுக்க வேண்டும். நான் மிகப்பெரிய விஜய் ரசிகை, அதனால நான் 4 முறை பீஸ்ட் படத்தை பார்ப்பேன். ஆனா மத்தவங்க ஒருதடவையாவது பார்க்கனும்ல” என கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ரூ.5 கோடி மோசடி... பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார் - நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

Read more Photos on
click me!

Recommended Stories