பிறந்த ஒரே நாளில் குழந்தைக்கு பெயர்சூட்டிய காஜல் அகர்வால்... பெயர் குட்டியாக இருந்தாலும் கியூட்டாக இருக்கே

First Published | Apr 20, 2022, 1:14 PM IST

Kajal Aggarwal : நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இத்தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை என்பதால் இருவரும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார்.

கர்ப்பமான பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகை காஜல், சினிமாவுக்கும் சில மாதங்கள் ரெஸ்ட் விட்டார். இதன்காரணமாக அவர் கைவசம் இருந்த அரைடஜன் படங்களும் கைநழுவிப் போயின. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத காஜல், அம்மா ஆகப்போகும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தார்.

Tap to resize

நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இத்தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை என்பதால் இருவரும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இந்த செய்தி அறிந்ததும் சமூக வலைதளங்களில் நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு, தனது குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி அக்குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நீல் என்ற பெயர் குட்டியாக இருந்தாலும் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீல் என்றால் சாம்பியன் என்று அர்த்தமாம்.

இதையும் படியுங்கள்... T RamaRao : விஜய் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்

Latest Videos

click me!