விஜயின் வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு என்ன ரோல் தெரியுமா?

Published : Aug 09, 2022, 04:03 PM ISTUpdated : Aug 09, 2022, 04:38 PM IST

படத்தில் விஜயின் சகோதரனான  ஷாம் இருக்கலாம் என கூறப்படுகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு படம் மூலம் ஷாம் - விஜியுடன் இணைகிறார்.

PREV
15
விஜயின் வாரிசு படத்தில் ஷ்யாமுக்கு என்ன ரோல் தெரியுமா?

விஜயின் வாரிசு படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பட குழுவினர் தற்போது விசாகப்பட்டினத்தில் ஒரு பெரிய ஷெட்யூலுக்காக முகாமீட்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சென்னையில் இருந்து படக்குழு விசாகப்பட்டினம் பறந்தது.

25
varisu

இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ வைரலாக வருகிறது. அதில் ஷாம் மற்றும் விஜய் இருவரும் விசாகத் துறைமுகத்தில் கப்பல் தொழிலாளர்கள் குழுவுடன் சண்டையிடுவதை காண முடிந்தது. படத்தில் விஜயின் சகோதரனான ஷாம் இருக்கலாம் என கூறப்படுகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு படம் மூலம் ஷாம் - விஜியுடன் இணைகிறார். முன்னதாக குஷி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாம்.

மேலும் செய்திகளுக்கு...உதயநிதி ...அருள்நிதி இணையும் டைரி..எப்ப ரிலீஸ் தெரியுமா?

35
Varisu

வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க உடன் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தமன் - விஜய் கூட்டணி இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகளுக்கு...'கடாவர்' படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்தனர்... செய்தியாளர் சந்திப்பில் அமலா பால் ஆதங்கம்!

45
VARISU

வாரிசு  அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. படப்பிடிப்பு அக்டோபரில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குடும்ப  நாடகமாக உருவாகும் இப்படம் நகைச்சுவை, காதல், ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த கலவையாக இருக்கும் என தெரிகிறது. வாரிசு படம் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்கு பதிப்போடு வெளியிடப்படுகிறது.  

மேலும் செய்திகள்: தீராத காதல்... மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு! அந்த நபர் யார் தெரியுமா?

55
varisu

முன்னதாக விஜய்நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் நடித்திருந்தார் விஜய் . இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை கண்டிருந்தது. இதை அடுத்து தற்போது டோலிவுட்டுக்கு நேரடியாக அறிமுகமாகும் தளபதி வம்சியுடன் கைகோர்த்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories