பட வெளியீடு குறித்து தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ள அருள்நிதி, எனது நெருங்கிய நண்பனும் எனது பேவரைட் டைரக்டருமான இன்னாசி பாண்டியன் உடன் இணைந்துள்ள டைரி ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது என்றும், உதயநிதி அண்ணாவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
சமீப காலமாக திரில்லர் படங்களை தன் கையில் எடுத்துள்ள அருள்நிதி தற்போது இன்னாசி பாண்டியர் இயக்கத்தில் டைரி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருள் நிதியுடன், பவித்ரா மாரிமுத்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
24
diary
சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமான டைரியை கதிரேசன் 5 ஸ்டார் கிரியேஷன் தயாரித்துள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ள ரெட் ஜெயண்ட் படம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெள்ளித்திரைகள் வெளியாகும் எ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தில் அருள்நிதி மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஊட்டி - கோவை சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுற்றி கதை நகர்கிறது. விபத்துக்களாகும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள மர்மத்தை அவிழ்க்க நாயகன்புறப்படுவதே டைரியில் கதைகளம்.
இதில் கிஷோர், ஜெயபிரகாஷ், சாரா, தணிகை மற்றும் தனம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய எஸ் பி ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்திற்கு ராம் ஈதன் யோஹான் இசையமைத்துள்ளார்.
44
diary
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பட வெளியீடு குறித்து தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ள அருள்நிதி, எனது நெருங்கிய நண்பனும் எனது பேவரைட் டைரக்டருமான இன்னாசி பாண்டியன் உடன் இணைந்துள்ள டைரி ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது என்றும், உதயநிதி அண்ணாவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.