சேதுராமன் முதல் மனோஜ் பாரதிராஜா வரை; இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்!

இளம் வயதில், மாரடைப்பு காரணமாக  உயிரிழந்த நடிகர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Sethuraman Manoj Bharathiraja and 5 Celebrities died heart attacks at young age mma

இளம் வயதிலேயே மாரடைப்பு காரணமாக இறக்கும், மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கூட மாரடைப்பால் இறக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்க்கு நம் வாழ்க்கை முறை தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் சிலர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தீவிர உடல்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நிலையில்  கூட மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். 

அப்படி மாரடைப்பு காரணமாக இந்த உலகை விட்டு பிரிந்த சில பிரபலங்கள் பற்றி இந்த பதிவில் பார்போம். 
 

Sethuraman Manoj Bharathiraja and 5 Celebrities died heart attacks at young age mma
சேதுராமன்:

மருத்துவரும் - நடிகருமான சேதுராமன், இவர் 2013ஆம் ஆண்டு, வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர், அவர் மூலமாகவே நடிகராகவும் மாறினார். இதை தொடர்ந்து  வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 போன்ற படங்களில் நடித்தார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு, தன்னுடைய 35 வயதில்... மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது இவரது மருத்துவமனையை இவரது மனைவி தான் நிர்வகித்து வருகிறார்.

நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் கடைசி ஆசை; 13 வருஷம் காத்திருந்தும் நடக்கல!


புனீத் ராஜ்குமார்:

கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டவர். திரையில் மட்டும் இன்றி, பல குழந்தைகளின் படிப்பு மற்றும் சிகிச்சைக்கு உதவி செய்து ரியல் ஹீரோவாக வாழ்ந்தவர். கடந்த 2021-ஆம் ஆண்டு, வீட்டில் உடல்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனீத் ராஜ்குமார் இறக்கும் போது அவருக்கு 46 வயது மட்டுமே ஆனது. கர்நாடகாவில் இவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள நிலையில், இதில் தினம் தோறும் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை தந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

விவேக்:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் தான் விவேக். 200-க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக், கடந்த 2021-ஆம் ஆண்டு தன்னுடைய 59 வயதில்... மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய இழப்பும் தற்போது வரை பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பாகவே உள்ளது.
 

பாரதி ராஜாவுக்காக மனோஜ் செய்த தியாகம்; 24 வருஷம் கழித்து அவராலேயே நிறைவேறிய கனவு!

சிரஞ்சீவி சர்ஜா:

கன்னட நடிகரான சிரஞ்சீவி, ஏராளமான கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர் திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்த நடிகை மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய 39-ஆவது வயதில், 2018-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் உயிரிழக்கும் போது மேக்னா 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிரஞ்சீவி சார்ஜா... அர்ஜுன் சர்ஜாவின் சகோதரி மகன் ஆவார்.

மனோஜ் பாரதிராஜா:

இவர்களை தொடர்ந்து, மிகவும் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் மனோஜ் பாரதிராஜா. கடந்த வாரம், இவருக்கு இதயத்தில் ஆபரேஷன் நடந்த நிலையில், ஸ்டண்ட் பொருத்தப்பட்டிருந்தது. உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், வீட்டில் ஓய்வில் இருந்த மனோஜ், நேற்று மாலை 6 மணியளவில் உயிரிழந்தார். இவரது மரணம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதில் உயிரிழந்த இவருக்கு திரையுலகமே ஒன்று கூடி... அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஏராளமான ரசிகர்களும் நேரடியாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறாரகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Manoj Bharathiraja: எனக்கு அல்லு விட்டுடுச்சு; இளையராஜா பற்றி மனோஜ் பாரதிராஜா பகிர்ந்த தகவல்!
 

Latest Videos

vuukle one pixel image
click me!