வீர தீர சூரன் vs எம்புரான் : வெற்றியை தட்டிதூக்கப்போவது யார்? பிரபல நடிகர் பளீச் பதில்
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் வருகிற மார்ச் 27ந் தேதியன்று நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் வருகிற மார்ச் 27ந் தேதியன்று நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.
Veera Theera Sooran' vs 'Empuran': Who will win the clash? விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படமும் மோகன்லாலின் எம்புரான் திரைப்படமும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. இதில் வீர தீர சூரன் திரைப்படத்தை சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
அதேபோல் மார்ச் 27ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு திரைப்படம் எம்புரான். இப்படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி உள்ளார். இது மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள எம்புரான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... மார்ச் 27ந் தேதி வீர தீர சூரன் படத்துடன் இத்தனை படங்கள் மல்லுக்கட்ட போகிறதா?
குறிப்பாக தமிழ்நாட்டிலும் எம்புரான் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் வீர தீர சூரன் படத்துக்கு நிகராக எம்புரான் படத்திற்கும் தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. முன்பதிவில் இரண்டு படங்களும் நன்கு வசூலை வாரிக்குவித்து வருகின்றன. எம்புரான் - வீர தீர சூரன் இந்த இரண்டு படங்களுக்கும் சில ஒற்றுமை உள்ளது. அதில் ஒன்று என்னவென்றால், இது இரண்டுமே இரண்டாம் பாக படங்களாகும். அதேபோல் இந்த இரண்டு படங்களிலும் சூரஜ் வெஞ்சரமூடு நடித்திருக்கிறார்.
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற வீர தீர சூரன் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட சூரஜிடம் இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த அல்டிமேட் பதில் என்னவென்றால், இரண்டுமே சிறந்த படங்கள். இதில் வீர தீர சூரன் ஹிட் ஆனால் விக்ரமுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். அதேபோல் எம்புரான் ஹிட்டானால் மோகன்லாலுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். ஆனால் இரண்டு படங்களுமே ஹிட்டாகும் என நம்பிக்கை உள்ளதால் அந்த இரண்டு படங்களிலும் நடித்துள்ள எனக்கு இரண்டு வெற்றி கிடைக்கும் என சூரஜ் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் வீர தீர சூரனை விட டபுள் மடங்கு வசூல்; முன்பதிவில் மாஸ் காட்டும் எம்புரான்!