வில்லங்கமான இயக்குனரின் படத்தில் வில்லனாக நடிக்கப்போகிறாரா விஜய் சேதுபதி?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் வெற்றிக்கு பின் ஹீரோவாக கலக்கி வரும் நிலையில், அவர் பான் இந்தியா படமொன்றில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் வெற்றிக்கு பின் ஹீரோவாக கலக்கி வரும் நிலையில், அவர் பான் இந்தியா படமொன்றில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Prabhas' film starring Vijay Sethupathi as a villain - Exciting news! தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் புகுந்து விளையாடுபவர் தான் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் இந்தியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு, ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
ஜவான் படத்துக்கு பின்னர் அதிகப்படியான வில்லன் வாய்ப்புகள் வந்ததால், தனது ஹீரோ இமேஜ் பாதித்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் விஜய் சேதுபதி. ஹீரோவாக இவர் நடித்த படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகிவந்த நிலையில், கடந்த ஆண்டு நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் அவருக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது. இப்படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் அமோக வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' படத்திலிருந்து உருகுது உருகுது... வீடியோ பாடல் வெளியானது!
மகாராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் ஏஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதுதவிர இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இப்படி ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு மீண்டும் வில்லனாக நடிக்க சான்ஸ் வந்துள்ளது. அதுவும் பிரம்மாண்டமாக உருவாகும் பான் இந்தியா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.
அப்படத்தின் பெயர் ஸ்பிரிட். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற வில்லங்கமான படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தான் இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இதில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். வில்லனாக நடிக்கக் கூடாது என்கிற கொள்கையுடன் இருக்கும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... Actor Vijay Sethupathi | புதுச்சேரி ஜோதி சிலம்ப குருகுலத்தில் பயிற்சி பெற்ற நடிகர் விஜய் சேதுபதி !