இயக்குனராக வேண்டும் என்கிற கனவில் இருந்த மனோஜ் பாரதி ராஜா, தந்தையின் ஆசைக்காக நடிகராக மாறிய நிலையில், பின்னர் அவரை வைத்தே படம் இயக்கி கனவை நிறைவேற்றினர் என்பது தெரியுமா?
மணிரத்னம் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'பம்பாய்' படத்தில், துணை இயக்குனராக பணியாற்றியவர் தான் மனோஜ் பாரதிராஜா. இதை தொடர்ந்து தனக்கான கதையை தயார் செய்த மனோஜ், அப்பா பாரதிராஜாவிடம் சென்று படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்த, படம் இயக்குவது மிகவும் கடினம். நான் ஒரு நடிகனாக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதால் திரைப்படம் இயக்க ஆரம்பித்தேன்.
24
அப்பாவுக்காக நடித்த மனோஜ்
என்னுடைய நிழலையாவது திரையில் பார்க்க ஆசை படுகிறேன் என கூறி, மனோஜ் ஹீரோவாக நடிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், அப்பாவுக்காக சம்மதம் தெரிவித்த மனோஜ், திரையுலகில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்தார். மனோஜ் ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
திரையுலகில் இருந்து சில காலம் விலகியே இருந்த மனோஜ், கடந்த 2023-ஆம், தன்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக இயக்கிய திரைப்படம் தான் 'மார்கழி திங்கள்'. இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்க, இந்த படத்தையே தாங்கி பிடிக்கும் முக்கிய ரோலில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடித்திருந்தார்.
44
மார்கழி திங்கள் மூலம் நிறைவேறிய மனோஜ் ஆசை
1999-ஆம் ஆண்டு அப்பாவுக்காக தன்னுடைய ஆசையை தியாகம் செய்து விட்டு, ஹீரோவாக நடிக்க துவங்கிய மனோஜின் ஆசை 24 வருடங்கள் கழித்து, இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. அதே போல் பாரதி ராஜாவிற்கு பிறகு அவரின் வாரிசுக்கு சுமார் 31-வருடங்கள் கழித்து இளையராஜா இசையமைத்திருந்தார். அதன்படி பாரதி ராஜா மற்றும் இளயராஜா ராஜா காம்போவில் மார்கழி திங்கள் படத்திற்கு முன் கடைசியாக வெளியான படம், 'நாடோடி தென்றல்' என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்து காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், அங்குள்ள சமூக பிரச்சனையையும் பேசி இருந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும், வசூல் ரீதியாக இப்படம் தோல்வியை சந்தித்தது குறிபிடத்தக்கது.