Manoj Bharathiraja: எனக்கு அல்லு விட்டுடுச்சு; இளையராஜா பற்றி மனோஜ் பாரதிராஜா பகிர்ந்த தகவல்!

Published : Mar 26, 2025, 11:07 AM ISTUpdated : Mar 26, 2025, 11:58 AM IST

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில், ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாக மாறி உள்ளது மனோஜ் பாரதி ராஜாவின் மரணம். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவர் தான் இயக்கிய படத்தின் இசைக்காக இளையராஜாவை அணுகிய போது இருந்த மனநிலை குறித்து பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.   

PREV
15
Manoj Bharathiraja: எனக்கு அல்லு விட்டுடுச்சு; இளையராஜா பற்றி மனோஜ் பாரதிராஜா பகிர்ந்த தகவல்!

கடந்த ஆண்டு இளையராஜாவின் புதல்வி பவதாரிணி கேன்சர் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரை தொடர்ந்து நேற்று பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் துணை இயக்குனர், நடிகர், இயக்குனர் என தன்னுடைய  பன்முக திறமையால் பிரபலமான மனோஜ் பாரதிராஜாவுக்கு, கடந்த வாரம் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டு ஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

25
இதயத்தில் நடந்த ஆபரேஷன்

இதன் காரணமாக வீட்டில் முழு ஓய்வில் இருந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு, நேற்று மாலை 6 மணி அளவில் ஏற்பட்ட மாரடைப்பு இவருடைய உயிரையே பறித்துள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் மரணத்திற்கு பின்னர் அவரைப் பற்றிய பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், இவர் தான் இயக்கிய 'மார்கழி திங்கள்' படத்தில் இளையராஜாவை இசையமைக்க அணுகிய போது எப்படி உணர்ந்தேன் என்பது பற்றி த்ரோ பேக் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

வீடியோ : மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!

35
அப்பாவுக்காக விருப்பமே இல்லாமல் நடிகரான மனோஜ்

மனோஜ் பாரதிராஜா ஒரு நடிகராக ஆவதற்கு முன்பு, அப்பாவை போலவே இயக்குனராக வேண்டும் என ஆசைபட்டாராம். ஆரம்பத்தில் மகனின் ஆசைக்காக மணிரத்தினத்தின் படத்தில் துணை இயக்குனராக சேர்த்துவிட்ட பாரதி ராஜா, மனோஜ் படம் இயக்க கதை தயார் செய்த பின்னர்... என்னால் நடிக்க முடியவில்லை. என்னுடைய நிழலாக உன்னை நான் திரையில் ஹீரோவாக பார்க்க வேண்டும் என ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து மனோஜ் பாரதிராஜா 'தாஜ்மஹால்' படத்தில் தன்னுடைய தந்தை இயக்கத்திலேயே ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பத்தில் அப்பாவின் ஆசைக்காக நடிக்க வந்தாலும் பின்னர் மனோஜ் இஷ்டப்பட்டு பல படங்களில் நடித்தாராம்.

45
மார்கழி திங்கள்

அதே போல் தன்னுடைய இயக்குனர் கனவை நிறைவேற்றும் விதமாக மனோஜ் பாரதிராஜா, கடந்த 2023 ஆம் ஆண்டு 'மார்கழி திங்கள்' என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்தார். சாதாரணமாக சிறு வயதில் இருந்தே அங்கிள் என கூப்பிட்டு பழக்கி இருந்தாலும், என்னுடைய படத்திற்காக அவரை அணுகியபோது எனக்கு உடம்பில் அல்லு இல்ல என உணர்வு பூர்வமாக பேசி உள்ளார்.

போன வருஷம் இளையராஜா மகள்; இந்த வருஷம் பாரதிராஜா மகன் - வாரிசுகளின் இறப்பால் இடிந்துபோன இமயங்கள்!

55
இளையராஜாவின் இசை பற்றி பேசிய மனோஜ்:

தொடர்ந்து பேசிய அவர், என்னையும் மீறி ஒரு பயம் எனக்குள் இருந்தது. காரணம் அவர் இசையில் ஒரு பெரிய ஜாம்பவான். நான் எதிர்பார்த்ததை விட, என்னுடைய படத்திற்கு அவ்வளவு அழகாக இசையை போட்டுக் கொடுத்தார். மொத்தமாக பத்து நாட்களில் என் படத்தின் இசை பணிகளை முடித்து கொடுத்துவிட்டார். 

இப்படி தான் இசை இருக்க வேண்டும் என நான் அவரிடம் சொல்லவில்லை....  அவரே எனக்கு அந்த சுதந்திரத்தை கொடுத்தார். ஒரு மூணு டியூன் போட்டு காண்பித்து இதில் எது பிடித்துள்ளது என கேட்டார். நான்  இரண்டாவது டியூன் என சொன்னதும் சரி செய்து கொடுக்கிறேன் என்று இசை பணியை திருப்திகரமாக செய்து கொடுத்தார் என இந்த பேட்டியில் மனோஜ் பாரதி ராஜா தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories