Published : Mar 26, 2025, 11:24 AM ISTUpdated : Mar 26, 2025, 11:27 AM IST
மனோஜ் பாரதிராஜாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Celebrities who Paid Last respect to Manoj Bharathiraja : இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். 48 வயதே ஆகும் மனோஜுக்கு அண்மையில் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த மனோஜுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. மனோஜின் மறைவால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவர் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் புகைப்படத் தொகுப்பை பார்க்கலாம்.
213
கருணாஸ்
நடிகர் கருணாஸ் கருப்பு சட்டை அணிந்தபடி வந்து மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பாரதிராஜாவுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
313
கே.எஸ்.ரவிக்குமார்
தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
413
மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய மனைவி சுஹாசினி உடன் வந்து மனோஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மணிரத்னத்திடம் தான் மனோஜ் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
513
நாசர்
நடிகர் நாசர் கனத்த இதயத்தோடு வந்து மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்திவிட்டு பாரதிராஜாவுக்கும் ஆறுதல் கூறினார்.
613
பி.வாசு
தமிழ் சினிமாவில் பல்வேறு கிளாசிக் ஹிட் படங்களை இயக்கிய பி. வாசு, மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
713
வித்தார்த்
பாரதிராஜா உடன் குரங்கு பொம்மை படத்தில் நடித்த நடிகர் வித்தார்த், மனோஜ் உடலுக்கு கனத்த இதயத்தோடு வந்து அஞ்சலி செலுத்தினார்.
813
கவுண்டமணி
தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக வலம் வந்தவர் கவுண்டமணி. அவர் பாரதிராஜா மகன் மனோஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
913
ராதிகா - சரத்குமார்
பாரதிராஜாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராதிகா, அவர் தன்னுடைய கணவர் சரத்குமார் உடன் வந்து மனோஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
1013
செந்தில்
நகைச்சுவை நடிகர் செந்தில், பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது எடுத்த புகைப்படம் இது.