சென்னையில் பிறந்து வளர்ந்த, தாரணி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சில, படங்களில் துணை நடிகையாக நடித்த நிலையில், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. படத்தில் கமிட் ஆகும் போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து, எதுவும் பேசாத இயக்குனர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் படி கூறியுள்ளார். தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய பின்னர் அவர் தொந்தரவு செய்வதை விட்டுவிட்டாராம்.
தாரணி இப்படி பேசியதால், அவரை அந்த கேமராமேன் நேரடியாக தொந்தரவு செய்யவில்லை என்றாலும்... அதிகமாக வெட்பம் தரக்கூடிய லைட்டுகளை, அடித்து கொடுமை படுத்தியதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஹீரோயின் வாய்ப்பே வேண்டாம் என முடிவு செய்து தொடர்ந்து குணச்சித்திர வேடங்களையே தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.