அமெரிக்காவில் கெத்து காட்டிய கமல்! காமிக்-கான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது ரசிகர்கள் உச்சாக வரவேற்பு!

Published : Jul 20, 2023, 01:43 PM ISTUpdated : Jul 20, 2023, 01:50 PM IST

சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கான் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, உலக நாயகன் கமல்ஹாசனுக்கு... ரசிகர்கள் உச்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
14
அமெரிக்காவில் கெத்து காட்டிய கமல்! காமிக்-கான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது ரசிகர்கள் உச்சாக வரவேற்பு!

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'ப்ராஜெக்ட் கே' உருவாகி வருகிறது. இந்த படத்தில்  இவருடன் இணைந்து, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில். இன்று இப்படத்தின், டைட்டில் மற்றும் டீசர் சான் டியாகோ காமிக்-கான் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது.

24

இதன்மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமான சான் டியாகோ காமிக்-கான் நிகழ்ச்சியில் பங்கேற்கும், முதல் இந்திய திரைப்படம் என்கிற பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது 'ப்ராஜெக்ட் கே'. மேலும் இன்று வெளியாகும் இப்படத்தின் கிலிம்ஸி காட்சியை பார்க்கவும், 'ப்ராஜெக்ட் கே' படத்தின் டைட்டில் குறித்து தெரிந்து கொள்ளவும், ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

34

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ப்ராஜெக்ட் கே பட குழுவினர் நேற்று முன்தினமே சான் டியாகோ சென்ற நிலையில், அவ்வப்போது பிரபலங்களின் புகைப்படங்களுடன் இது பற்றிய தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு கொண்டே இருந்தது. அந்த வகையில், காமிக்-கான் நிகழ்ச்சியில் பங்கேற்க நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உச்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

44

ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜட்டில் இப்படம் உருவாகி வருகிறது. அறிவியல் புனைகதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். மேலும் கமல்ஹாசன், அமிதாப் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இப்படத்தில் இணைத்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories