நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இதேபோல் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நடித்துள்ள மொய்தீன் பாய் கதாபாத்திரத்திற்கான காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டது.
25
இதையடுத்து தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் ரஜினி. அதில் ஒன்றை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இன்னொரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. இப்படி இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மாலத்தீவுக்கு சென்றுவிட்டார்.
35
வழக்கமாக ஏதேனும் பிரேக் கிடைத்தால் இமயமலைக்கோ அல்லத்து ஏதேனும் ஆன்மிக தளங்களுக்கோ செல்லும் ரஜினி, எதற்காக மாலத்தீவு சென்றார் என்பது புரியாத புதிராகவே இருந்தது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ரஜினியின் மாலத்தீவு விசிட்டுக்கு பின்னணியில் இருக்கும் ரகசியத்தை யூடியூப் வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து போன ரஜினி, மன அமைதிக்காக தான் மாலத்தீவுக்கு சென்று இருப்பதாக பயில்வான் கூறி இருக்கிறார். அந்த பிரச்சனை என்னவென்றால், தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, தன் தந்தை ரஜினியிடம் போய் தான் உதவி இயக்குனர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியதாகவும், இதனால் டென்ஷன் ஆன ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு கிளம்பி சென்றுவிட்டதாக பயில்வான் புது குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார்.
55
அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவுக்கு ஒரு அட்வைஸையும் கொடுத்துள்ளாராம் ரஜினி, அதன்படி தனுஷ் விவாகரத்து பெறும் ஐடியாவில் இல்லை. அவர் அந்த எண்ணத்தில் இருந்திருந்தால் உன் மகன்கள் மீது இவ்வளவு பாசமாக இருக்க மாட்டார். அவர் மகன்கள் மீது காட்டும் பாசம் உன்மீதும் நேசமாக மாறும், நீ பொறுமையா இரு, இதுபோன்று தவறான முடிவெல்லாம் எடுக்காதே என ரஜினி தன் மகளுக்கு அறிவுரை கூறியதாகவும் பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். வழக்கமாக எங்கு சென்றாலும் மகள் ஐஸ்வர்யா உடன் செல்லும் ரஜினி, இம்முறை மாலத்தீவுக்கு தனியாக போனதற்கு காரணம் இதுதான் என கொளுத்தி போட்டிருக்கிறார் பயில்வான்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.