மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான, திவ்யா ஸ்ரீதர் கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது மூத்த, ஆன்மீக குருவும் நடிகருமான கிறிஸ் வேணுகோபாலைத் திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது தன்னுடைய மகளின் பிரிவு குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய திரை பிரபலங்களின் திருமணம் மற்றும் விவாகரத்து என இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசுபொருளாக மாறி விடுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு 40 வயதான சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தன்னை விட 10 வயது மூத்த நடிகர் கிறிஸ் வேணுகோபாலைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறிய நிலையில், இது பற்றி துளியும் கவலை படாமல் தங்களுடைய வாழ்க்கையை துவங்கி தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
25
திவ்யாவின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவு
ஏற்கனவே திவ்யா ஸ்ரீதர் தனது முதல் திருமணத்தைப் பற்றி, பல பேட்டிகளில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த நிலையில், தற்போது, தன்னுடைய மகளை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்த காலத்தைப் பற்றி, கைரளி சேனலுக்கு அளித்த பேட்டியில் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
35
மகளை விட்டு பிரிந்திருந்த தருணம்:
''என் மகள் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான், நான் என்னுடைய முதல் திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறினேன். திரும்பிச் செல்லலாம் என்ற எண்ணத்தில்தான் வெளியேறினேன். ஆனால், திரும்பிச் செல்ல முடியாத சூழல் உருவாகி விட்டது. இதனால் இரண்டு வருடங்கள் என் மகளை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் தொடர்பு கொள்ளக்கூட முடியவில்லை. பின்னர் எப்படியோ ஒரு நாள் என் மகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பிறகு தினமும் பேச ஆரம்பித்தேன்'', என்று திவ்யா கூறியுள்ளார்.
''என் மகளை பார்க்க அவள் படித்த பையனூரில் உள்ள பள்ளிக்குப் போய்ப் பார்ப்பேன். அப்போது என் மகன் மட்டுமே என்னுடன் இருந்தாள். என் மகனுக்கு ஒன்றே முக்கால் வயதுதான் அவனுடன் தான் போனேன். என் மகளை மறைந்திருந்து பார்க்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. சாக்லேட் கொடுக்கும்போது, அதை யாரும் பார்க்காமல் மொட்டை மாடியில் போய் உட்கார்ந்து சாப்பிடுவாள்.
55
18 வயதாகும் மகன் என்னுடன் தான் இருக்கிறார்:
அவரிடம் நான், உனக்கு எப்போது அம்மாவிடம் வர வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது அம்மாவை நீ கூப்பிட வேண்டும் என்ற. ஆனால், ஒருபோதும் நான் அவளை வற்புறுத்தியது இல்லை. ஒரு நாள் இரவு என் மகள் என்னை அழைத்தாள். அம்மா நீ வந்து என்னை அழைச்சிட்டு போயிடு என்றால். அப்போது என் மகளை, பரியாரம் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு என்னுடன் அழைத்து வந்தேன். இப்போது வரை என்னுடன் தான் இருக்கிறாள். அவர்களுக்கு பதினெட்டு வயதாகிறது. மகளை மறைந்திருந்து பார்க்க வேண்டிய நிலையை அனுபவித்தவர்களுக்குத்தான் என்னுடைய வலி புரியும் '' என்று திவ்யா உருக்கமாக பேசியுள்ளார்.