எனினும் கொரோனா காலகட்டத்தில், ஒரு வேலை உணவுக்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது நடிகர் சத்யராஜ் தனக்கு பண உதவி செய்ததாக கூறியுள்ள பாலாம்பிகா, ஒருவேளை விஜய், அஜித், கமல், பிரசாந்த், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் வாய்ப்பு கிடைத்திருந்தால்.. நானும் முன்னணி நடிகையாக இருந்திருப்பேன் என கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவருடைய பேச்சு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.