Nayanthara Twin Babies
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
கோலிவுட்டில் மிகவும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் -நயன்தாரா தான். கடந்தாண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி வாடகைத் தாய் முறையில், திருமணமான நான்கே மாதத்தில் குழந்தை பெற்றுக்கொண்டது. அந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளனர்.
preity zinta Twin babies
ப்ரீத்தி ஜிந்தா
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, வாடகைத்தாய் முறையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொண்டார். இவர் ஜெனி குட் எனஃப் என்பவரை காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதில் ஆண் குழந்தைக்கு ஜெய் என்றும் பெண் குழந்தைக்கு ஜியா என்றும் பெயரிட்டுள்ளனர்.
Sanjay Dutt Twin Babies
சஞ்சய் தத்
லியோ படத்தில் வில்லனாக மிரட்டி வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு மன்யதா என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஷாரான் மற்றும் இக்ரா என்கிற இரட்டை குழந்தைகள் பிறந்தன.
Sunny Leone Twin Babies
சன்னி லியோன்
ஆபாச நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு அஷெர், நோயா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் முறையில் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டார் நடிகை சன்னி லியோன்.