கர்ப்பமாக இருக்கும் தகவலை ரொமான்டிக்காக அறிவித்த சின்னத்திரை ஜோடி கண்மணி - நவீன்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

First Published | Feb 14, 2023, 5:25 PM IST

சின்னத்திரை மூலம் பிரபலமான செய்தி வாசிப்பாளர் கண்மணி, கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வித்தியாசமான போஸ்ட் ஒன்றை போட்டு வெளிப்படுத்தியுள்ளனர். இது வைரலாக ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
 

வெள்ளித்திரையை தாண்டி, சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களும் தங்களுடன் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நண்பர்களை காதலித்து கரம் பிடிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்த செந்தில் - ஸ்ரீஜாவில் தொடங்கி, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சய் - ஆலியா மானசா, திருமணம் சீரியல், சித்து - ஸ்ரேயா என  சீரியலில் இணைந்து நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பற்றிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கைகூடாத காதல்! பயில்வான் ரங்கநாதனை துரத்தி... துரத்தி காதலித்த 3 நடிகைகள்..! அதில் ஒருவர் இவரா?

Tap to resize

இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்த ஜோடி தான் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்த நவீன். இவர் தன்னுடைய நீண்ட நாள் தோழியும், காதலியான, செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில், தற்போது கண்மணி கர்ப்பமாக இருக்கும் தகவலை கியூட் வீடியோ ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய அடுத்த மரணம்! பல சூப்பர் ஹிட் படங்களின் கலை இயக்குனர் ஆர்.ராதா காலமானார்!

இந்த வீடியோவில் கருப்பு நிற உடையில் இருக்கும் கண்மணி வயிறு சற்று பெரிதாக உள்ளதை பார்த்து, ரசிகர்களும் அடுத்தடுத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் தனக்கு ஃபேவரட் பாடல் + ஃபேவரட் பர்சன் + ஃபேவரட் ஆட்டிடி யூட் என குறிப்பிட்டு கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை மிகவும் கியூட்டாக வெளிப்படுத்தியுள்ளது இந்த ஜோடி.

இதை தொடர்ந்து கண்மணி மற்றும் நவீன் தம்பதிக்கு  ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பால்வண்ண மேனியை பளீச் என காட்டி! சைடு போஸில் கிக் ஏற்றும் ‘டான்’ நாயகி பிரியங்கா மோகன் - வைரல் கிளிக்ஸ் இதோ

Latest Videos

click me!