சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி என சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளைப் போல் சின்னத்திரையிலும் தற்போது காதல் ஜோடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, தொடங்கி அடுத்ததாக ராஜா ராணி சஞ்சீவ் - ஆலியா மானசா, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா- ஆர்யன், ராஜா ராணி 2 ஹீரோ சித்து - ஸ்ரேயா என அதன் லிஸ்ட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன். இவர் பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகர் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
நவீன் மற்றும் கண்மணி இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதனால் அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.