Naane Varuven Movie : என்ன பொசுக்குனு அடிதடில இறங்கிட்டாங்க... தனுஷ் - செல்வராகவன் இடையே திடீரென வெடித்த மோதல்

Ganesh A   | Asianet News
Published : Mar 06, 2022, 01:24 PM ISTUpdated : Mar 06, 2022, 01:26 PM IST

Naane Varuven Movie : நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். எஸ்.கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் இந்துஜா நடிக்கிறார். 

PREV
15
Naane Varuven Movie : என்ன பொசுக்குனு அடிதடில இறங்கிட்டாங்க... தனுஷ் - செல்வராகவன் இடையே திடீரென வெடித்த மோதல்

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம்வருபவர் செல்வராகவன். தனுஷின் துள்ளுதோ இளமை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், இதையடுத்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

25

சமீபகாலமாக  நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். அந்த வகையில் இவரை நடிகராக அறிமுகப்படுத்தியது அருண் மாதேஸ்வரன் தான். ராக்கி படத்தின் இயக்குனரான இவர் தற்போது இயக்கி முடித்துள்ள சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

35

இதுதவிர நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் செல்வராகவன். மேலும் திரெளபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

45

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்வராகவனின் பிறந்தநாளை ஒட்டி நானே வருவேன் படக்குழு வெளியிட்ட போஸ்டரில் தனுஷ் மற்றும் செல்வராகவனின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதன்மூலம் அவரும் இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

55

நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். எஸ்.கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் இந்துஜா நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... Sanjjanaa Galrani : கர்ப்பமாக இருக்கும் நடிகைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய பிரபலத்தின் மகன் கைது

Read more Photos on
click me!

Recommended Stories