தமிழ் சினிமாவில், தன்னுடைய முதல் படத்தை இயக்கி... சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்து, முன்னணி நடிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் செல்வராகவன்.
தலைமுடியை மிகவும் ஸ்டைலிஷாக கட் செய்து, கிளீன் ஷேவ் மற்றும் மீசையை அகற்றி விட்டு பார்ப்பதற்கு யங் ஹீரோவை போல் மாறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனுஷை வைத்து, செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் இயக்குவதை தொடர்ந்து, நடிப்பிலும் முழு கவனம் செலுத்தி வரும் செல்வராகவன்... தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கி வரும் ‘பகாசூரன்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.