ஹீரோவாக செல்வராகவன்... ஹீரோயினாக ‘வாரிசு’ நடிகை - பரபரப்பாக தயாராகும் அரசியல் படம்

First Published | Jul 31, 2023, 1:54 PM IST

தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தில் செல்வராகவன் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர்.

இயக்குநர் செல்வராகவன், சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். அவர் தற்போது மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் புதிய படமொன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் மூலம் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராமபாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இதையும் படியுங்கள்... முதல் பாடலே செம மாஸா இருக்கே... அனிருத் இசையில் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்- வைரலாகும் ஜவான் பர்ஸ்ட் சிங்கிள்

Tap to resize

படத்தை பற்றி இயக்குநர் ரெங்கநாதன் கூறுகையில், "தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன், அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி," என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், "படப்பிடிப்பு தொடங்கி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐம்பது நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்," என்றார். 

இதையும் படியுங்கள்... மும்பையில் 3 பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பை ரூ.103 கோடிக்கு வாங்கிய பிரபல தயாரிப்பாளர்

Latest Videos

click me!