நடிகர் ஆர்யா, பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்... ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் முறையாக நெகிழ்ச்சியான பதிவுடன், மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஆர்யாவுடன் கஜினிகாந்த், மற்றும் காப்பன் படத்தில் நடித்த பொது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல்மலர்ந்தது. இவர்களின் காதல் குறித்து சில தகவல்கள் வெளியான போது, இருதரப்புமே வாய் திறக்காத நிலையில், திடீரென ஆர்யா மற்றும் சாயிஷா தங்களுடைய திருமணம் குறித்து வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு ஒரு வயது ஆன பிறகும் கூட குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்து வந்த, ஆர்யா - சாயிஷா ஜோடியின் மகள் ஆரியானாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சாயிஷா மிகவும் நெகிழ்ச்சியான பதிவுடன், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சாயிஷா கூறியுள்ளதாவது, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே, நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை மற்றும் சிறந்த மனிதர். நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதற்காக நாங்கள் மிகவும் பாக்கியமானவர்கள். நீங்கள் என்னுடையதாக இருப்பதற்கு நன்றி. நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவும் மற்றும் குழந்தையின் புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குக் வித் கோமாளி ரித்திகா காதல் கணவருடன்... எங்கு ஹனி மூன் சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!