விஜயகாந்த் ஆளு நீ.. உனக்கு சான்ஸ் கிடையாதுனு சொல்லி வடிவேலு அசிங்கப்படுத்தினார்... பிரபல நடிகர் பகீர் பேட்டி

Published : Dec 11, 2022, 02:16 PM IST

நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு, உங்களுக்கெல்லாம் சான்ஸ் தர முடியாதுனு சொல்லி வடிவேலு தன்னை அசிங்கப்படுத்தியதாக பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

PREV
15
விஜயகாந்த் ஆளு நீ.. உனக்கு சான்ஸ் கிடையாதுனு சொல்லி வடிவேலு அசிங்கப்படுத்தினார்... பிரபல நடிகர் பகீர் பேட்டி

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் வடிவேலு. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

25

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் போது தன்னை பற்றிய சர்ச்சைகள் குறித்து மனம்விட்டு பேசி இருந்தார் வடிவேலு. குறிப்பாக ஒரு பேட்டியில், தன்னை திமிருபுடிச்சவன்னு நிறைய பேர் சொல்றாங்க அதற்கு காரணம், தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்கமாட்டேன். அந்த கோபத்தில் வடிவேலுவுக்கு ரொம்ப திமிரு என்று புரளியை கிளப்பி விடுகிறார்கள் என கூறி இருந்தார்.

35

இந்த நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : “ஒரு நாள் டப்பிங் ஸ்டூடியோவில் வடிவேலுவை பார்த்தபோது அவர் ஒரு பட வாய்ப்பு இருப்பதாக என்னிடம் கூறினார். நானும் அதற்கு சரி என சொன்னதால் உடனே அப்படத்தின் இயக்குனருக்கு போன் போட்டு என்னைப்பற்றி கூறினார். அவரும் ஓகே சொல்லிவிட்டதால் நாளைக்கு ஷூட்டிங்கிற்கு வருமாறு கூறிவிட்டு சென்றார் வடிவேலு.

இதையும் படியுங்கள்... என்னை திமிரு பிடிச்சவன்னு சொல்றாங்க... அதற்கு காரணம் இதுதான் - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வடிவேலு

45

நானும் அவரது பேச்சைக் கேட்டு ஷூட்டிங் போனேன். ஆனால் அங்கு எனக்கு தருவதாக சொன்ன கேரக்டரில் பெசண்ட் ரவியை நடிக்க வைத்து எடுத்துக்கொண்டிருந்தார்கள். பின்னர் அந்த ஷாட் முடிந்ததும் வடிவேலுவை பார்த்து இதுபற்றி கேட்டதற்கு, அவர் நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு, உங்களுக்கெல்லாம் சான்ஸ் தர முடியது என மூஞ்சில் அடிச்சமாதிரி பேசினார். எனக்கு பயங்கர கோபம் வந்தது. 

55

இது ரொம்ப அவமானப்படுத்துற மாதிரி இருக்கு, தயவு செய்து இதுபோல் வேறு எந்த நடிகரிடமும் இப்படி செய்யாதீங்கனு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். மறுநாள் விஜயகாந்த்தை சந்திக்க சென்றபோது, நான் சொல்லும் முன்பே அவர் காதுக்கு இந்த விஷயம் சென்றுவிட்டது. நான் சென்றதும், இப்படி அசிங்கப்படுத்திருக்கான், நீங்க ஏன் சும்மா விட்டுட்டு வந்தீங்க. சின்னகவுண்டர் படத்துல அவன நடிக்க வைக்க வேண்டாம்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா நான் தான் டிரைக்டர் கிட்ட பேசி ஒரு வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்னு கேப்டன் தன்னிடம் சொன்னார்” என மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...  Sarathkumar: நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!

Read more Photos on
click me!

Recommended Stories