பிரபல நடிகர் சரத்குமார் உடல்நல குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி, திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Radhika Sarathkumar
தற்போது சரத்குமாரின் மகள் வரலட்சுமி மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும் இதுவரை சரத்குமாரின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், சரத்குமார் பூரண நலம் பெற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர். நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இவருக்கு ராகுல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். அதே போல், இவருடைய முதல் மனைவி சாயாவுக்கும், சரத்குமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளது. இதில் மூத்த பெண்ணான வரலட்சுமி சரத்குமாரும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருடைய உடல்நிலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்... தற்போது வெளியாகியுள்ள தகவலில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சிதிலகம் நாட்டாமை ரா.சரத்குமார் அவர்கள், சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார்கள். பரிசோதனை நிறைவு செய்து தலைவர் அவர்கள் தற்போது பூரண நலத்துடன் உள்ளார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Aditi: பச்சை நிற பளீச் உடையில்... லைட்டாக இடையை காட்டி ரசிகர்களை மயக்கும் அதிதி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்!