நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பிக்பாஸ் பிரபலங்கள் சிபி, அமீர், பாவனி, மமதி சாரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்லார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.