வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு! அவருக்கு எதுக்கு கனவு இல்லம்? அரசின் அறிவிப்பால் கொந்தளித்த பிரபலம்

Published : Jun 09, 2023, 10:20 AM IST

கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கவிஞர் வைரமுத்துவுக்கு கனவு இல்லம் வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

PREV
14
வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு! அவருக்கு எதுக்கு கனவு இல்லம்? அரசின் அறிவிப்பால் கொந்தளித்த பிரபலம்

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கலைஞர் செம்மொழி விருது அல்லது சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதுகள் ஏதேனும் பெற்றிருந்தால், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ‘கனவு இல்லம்’ என்கிற திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

24

தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ், எழுத்தாளர்கள் புவியரசு, பூமணி, இமயம், ஈரோடு தமிழன்பன், சுந்தரமூர்த்தி, மோகராசு ஆகிய 6 பேருக்கு கடந்தாண்டு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப சென்னை மற்றும் கோயம்புத்தூரில் வீடுகள் வழங்கப்பட்டு இருந்தன. அந்த வகையில் தற்போது கள்ளிக்காட்டு இதிகாசத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கும் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்... முதலாம் ஆண்டு திருமணநாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

34

தமிழக அரசின் இந்த அறிவிப்பு பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு? 2006ல சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு ரூ.5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியத்துல எடுத்துது. இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா? என சரமாரியாக சாடி உள்ளார்.

44

அதேபோல் மற்றொரு பதிவில், வைரமுத்துவுக்கு ஏற்கனவே உள்ள 3 வீடுகளின் விவரங்களை வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர், கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு?  யார் அப்பா வீட்டு பணம்? என முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கைக் குழந்தையை கவர்ந்த விஜய்... தளபதியின் நடனத்தை பார்த்ததும் அழுகையை நிறுத்தி கியூட்டாக சிரித்த குழந்தை

Read more Photos on
click me!

Recommended Stories