காதல், ஆக்ஷன், போன்ற படங்களில் நடிப்பது கூட சுலபம் தான். ஆனால் ஒரு ஆண் , தன்னை ஒரு பெண்ணாக பாவித்து... திருநங்கையாக நடிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. ஆனால் இதை கூட சில நடிகர்கள் அசால்டாக செய்துள்ளார். அவர்கள் பற்றிய தொகுப்பு இதோ...
விஜய் சேதுபதி:
ஹீரோ - வில்லன் என்பதை தாண்டி, எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும், அசால்டாக 6 அடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடும் விஜய் சேதுபதி, ஷில்பா என்கிற திருநங்கையாக நடித்திருந்த திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் நடித்ததற்காக சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றார் என்பது குறிபிடித்தக்கது.
சரத்குமார்:
காஞ்சனா படத்தில், சரத்குமாரின் திருநங்கை வேடத்தை ரசிக்காத ரசிகர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த துணை நடிகருக்கான பல விருதுகளை வென்றார்.
ராகவா லாரன்ஸ்
காஞ்சனா படத்தை இயக்கி, நடித்திருந்த லாரன்ஸ், சில காட்சிகளில்... ஒரு திருநங்கை போல நடித்து அசத்தி இருப்பார். இதற்காக இவர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும், விருதுகளை வென்றார். சமீபத்தில் காஞ்சனா திரைப்படம், ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், ஹிந்தியிலும் வசூலில் வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.