விக்கியுடன் 'நானும் ரவுடி' தான் படத்தில் நடிக்க கமிட் ஆன நயன்தாரா... பின்னர் காதலிலும் கமிட் ஆகி லிவிங் டூ கெதர் வாழ்க்கையிலும் இணைந்தார். இருவரும் 2016 ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், அதனை வெளிப்படுத்தி கொள்ளாமல், சுமார் 7 ஆண்டு காதல் ஜோடிகளாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ந் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததால்... திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பிரபலங்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதே போல் நயன்தாரா - விக்கி திருமணத்தில் கலந்து கொள்ள 200 பேருக்கு மட்டுமே அனுமதியும் வழக்க பட்டது.
nayanthara
மேலும் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் திரையுலகில் நயன்தாரா கவனம் செலுத்திய நிலையில், திடீர் என திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறிய தகவலையும் வெளியிட்டனர்.
இது குறித்து விக்கி போட்டுள்ள பதிவில், 'உனக்கு நேற்று திருமணம் நடந்தது! திடீரென்று என் நண்பர்கள் "ஹேப்பி ஃபர்ஸ்ட் இயர் மேரேஜ் ஆனிவர்சரி" என்று எனக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள். சார்பியல் கோட்பாடு உண்மை தான். "லவ் யூ தங்கமே! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்! இன்னும் வெகுதூரம் போகவேண்டும்! ஒன்றாகச் நிறைய சாதிக்க வேண்டும்!