நடிகை சமந்தா தற்போது, ஃபேமிலி மேன் 2, வெப் சீரிஸை தொடர்ந்து, சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இது ஆங்கிலத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் 'சிட்டாடல்' தொடரின் முன்னோட்டமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு செர்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிட்டாடல் அணிக்கு திரௌபதி முர்முவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வருண் தவான், சமந்தா மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் திரௌபதி முர்முவை சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மேலும் இது குறித்து வருண் தவான், போட்டுள்ள பதிவில்... செர்பியாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கும் அதிர்ஷ்டம் சிட்டாடல் அணிக்கு கிடைத்தது. இதை ஒரு கவுரவமாக உணர்கிறோம் என்று வருண் தவான் பதிவிட்டுள்ளார். மேலும் சமந்தா இன்ஸ்டா ஸ்டோரியில் 'மேடம் பிரசிடெண்ட்' என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தில் சமந்தா, மிகவும் கியூட்டாக அழகான ஹேர் ஸ்டைல் மற்றும் கண்ணாடிஅணிந்து காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரபல இயக்குனருக்கு மாரடைப்பு.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!