தமிழில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற மேகா ஆகாஷுக்கு, அங்கு அடுத்தடுத்து ஹிட் பட வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கில் தற்போது பிசியாக நடித்து வரும் மேகா ஆகாஷ், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. அதுவும் பிரபல அரசியல்வாதியின் மகனை தான் மேகா ஆகாஷ் கரம்பிடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.