விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2000 நடனக் கலைஞர்களுடன் விஜய் நடிக்கும் மாஸான குத்துப் பாடல் காட்சியை தான் தற்போது படமாக்கி வருகின்றனர். இப்பாடலை அனிருத் உடன் சேர்ந்து பிக்பாஸ் பிரபலம் அசல் கோளாறு பாடி இருக்கிறாராம்.
இப்படி லியோ பட ஷூட்டிங் ஒரு பக்கம் படுஜோராக நடைபெற்று வரும் வேளையில், மறுபக்கம் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தளபதி 68 படத்தின் வேலைகளும் படு பாஸ்ட் ஆக நடைபெற்று வருகிறதாம். இப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கப்போகிறார் என்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். அதேபோல் ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற அறிவிப்பும் ஏற்கனவே வந்தாச்சு.
இதையும் படியுங்கள்... தெலுங்கில் ஒரு சூர்யா - ஜோதிகா! நிச்சயதார்த்த தேதியோடு வாரிசு நடிகர் உடனான காதலை அறிவித்த லாவண்யா திரிபாதி
அடுத்தக்கட்டமாக தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி தான் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த பட்டியலில் ஏற்கனவே பல்வேறு நடிகைகளின் பெயர் அடிபட்டது. அந்த வகையில் முதலில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அடுத்ததாக தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. பின்னர் அதெல்லாம் வதந்தி என தெரியவந்தது.
இந்த நிலையில், தற்போது தளபதி 68 ஹீரோயின் பற்றி ஒரு ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால் அவர் இணையும் மூன்றாவது படமாக இது அமையும், இதற்கு முன்னர் விஜய்யும், ஜோதிகாவும் இணைந்து குஷி, திருமலை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக 23 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன குஷி படத்தில் இருவரும் லிப்லாக் சீனில் நடித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... டபுள் ட்ரீட் கன்பார்ம்! விஜய் பிறந்தநாளன்று சர்ப்ரைஸாக வரவுள்ள லியோ & தளபதி 68 அப்டேட்ஸ் என்னென்ன? முழு விவரம்