தெலுங்கில் ஒரு சூர்யா - ஜோதிகா! நிச்சயதார்த்த தேதியோடு வாரிசு நடிகர் உடனான காதலை அறிவித்த லாவண்யா திரிபாதி

First Published | Jun 8, 2023, 2:17 PM IST

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதியை காதலிப்பதை உறுதி செய்து நிச்சயதார்த்த தேதியையும் அறிவித்துள்ளார்.

காதல் பாடல்களையும், காதல் படங்களையும் நிறைய தந்துள்ள சினிமாவில் இருந்து அவ்வப்போது காதல் ஜோடிகளும் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ராதிகா - சரத்குமார், குஷ்பு - சுந்தர் சி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ஆதி - நிக்கி கல்ராணி என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகிலும் ரீல் ஜோடிகள், ரியல் ஜோடிகள் ஆன நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.

அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைய உள்ள ஜோடி தான் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி. இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர், நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இதில் வருண் தேஜ் வாரிசு நடிகர் ஆவார். இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர் ஆவார். சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவின் மகன் தான் வருண் தேஜ். இவரும் நடிகை லாவண்யா திரிபாதியும் 2 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக காதலித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... இதெல்லாம் ஓட்டல் ரூம்ல பண்ணுங்க... கீர்த்தி சனோனை கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனரை வெளுத்துவாங்கிய பிரபலம்

Tap to resize

இவர்கள் இருவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது வந்தாலும், அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் காத்துவாக்குல கடந்து சென்றது இந்த ஜோடி. இதனிடையே தற்போது அவர்கள் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளதோடு, தங்களது திருமண நிச்சயதார்த்த தேதியையும் அறிவித்து உள்ளனர். அதன்படி வருகிற ஜூன் 9-ந் தேதி அதாவது நாளை இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்வு ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் குடும்ப உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்தை அனைத்து திரையுலக பிரபலங்களையும் அழைத்து பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். வருண் தேஜின் காதலியான நடிகை லாவண்யா திரிபாதி தெலுங்கில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதேபோல் அவர் தமிழிலும் சசிகுமாரின் பிரம்மன், சந்தீப் கிஷான் உடன் மாயவன் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ-எண்ட்ரி கொடுத்த மணிமேகலை... ஆனா கோமாளியா இல்ல!

Latest Videos

click me!